செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் கண்டுபிடிப்புக்களுக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு
பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிடிபனையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார்.
தீகவாபிய அருண' நிதி திரட்டும் திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு
தீகவாபி தூபி மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதி திரட்டும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் இன்று (பெப்ரவரி,12) நடைபெற்றது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் விஷேட அதிதியாக பிரதமரும், புத்தசாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் கலந்துகொண்டார்.
ஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களுக்குமான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது
ஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களின் பெருமை மற்றும் கௌரவம் என்பன அவர்கள் பெருமையுடனும் தொழில் ரீதியான அந்தஸ்துடனும் பிரதிபலிப்பதிலேயே தங்கியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
சுதந்திர தின வைபவத்தை சுகாதார வழிமுறைகளுக்கமைய நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கான சட்ட சீர்திருத்தங்கள் - பாதுகாப்பு செயலாளர்
போதைப் பழக்கத்திற்கு ஆளான சிறு குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவர்களை புனவாழ்வு மையங்களுக்கு அனுப்புவதற்கு விரைவில் சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 29) தெரிவித்தார்.
'பாதுகாப்பு மீளாய்வு 2020' வெளியிடப்பட்டது
தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்ட 'பாதுகாப்பு மீளாய்வு 2020' வெளியீட்டு நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய கருப்பொருள் தொடர்பில் கலந்துரையாடி தற்காலத்தில் அவசியமாகும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் நாடுகடந்த குற்றச் செயல்கள் எனும் தற்கலாலத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் ஆராயும் ஒரு முக்கிய தளமாக அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தீகவாபி தூபி மறுசீரமைப்பிற்கு தேவையான செங்கற்களை தயாரிக்க நடவடிக்கை.
தீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்திற்கு நாளொன்றுக்கு 30,000 தரமான செங்கக்கற்கள் கோரப்படுவதால், இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் செங்கற்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.