பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காடழிப்பைக் கட்டுப்படுத்த விமானப்படையினரால் வான்வழி கண்காணிப்பு - பாதுகாப்பு செயலாளர்

சட்டவிரோத காடழிப்பு பெருமளவில்  பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான  முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது  தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“நிவர்” சூறாவளி தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “நிவர்” சூறாவளியானது நேற்று 2330 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 230 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

7,467 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 458 பேர் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  20,967ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 280 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

330 கிலோ கிராம் சட்டவிரோத உலர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது

பேசாலையில் இருந்து  உப்புக்குளம் நோக்கின் பயணித்த வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை  வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள  இராணுவத்தின் 11வது  பீரங்கி படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

10,679 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  20,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்து சமுத்திரத்தில் இதுவரை இல்லாதவாறு இலங்கை பெரும் பங்கு வகிக்கும் - பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இந்து சமுத்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும் என குறிப்பிட்டார்.











செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மைய அனர்த்த மீட்பு குழு படைவீரர்களின் செயல் விளக்க காட்சி

இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தில் 40 நாட்களைக் கொண்ட   அனர்த்த முகாமை மற்றும்  மீட்பு பணிகள் தொடர்பான  அடிப்படை பாடநெறியினை நிறைவு செய்த படைவீரர்களினால் அனர்த்தங்களின் போதான  மீட்பு பணிகள் தொடர்பான செயல் விளக்க காட்சி அளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

12,095 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 400 பேர் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  20,171 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு

இரண்டு புதிய அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழிநுட்ப அமைச்சு மற்றும் பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சு ஆகிய புதிய இரண்டு அமைச்சுகளே இவ்வாறு வர்த்தமானி  அறிவித்தல்  மூலம் வெளியிடப்பட்டுள்ளன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்  அடுத்த 24-48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பல பகுதிகள் நாளை முதல் விடுவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பொரள்ளை, வெல்லம்பிட்டிய, கொழும்பு கோட்டை, கொம்பனித் தெரு ஆகிய பொலிஸ் பிரதேசங்கள்  நாளை அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.