பாதுகாப்பு செய்திகள்
கிண்ணியாவில் படகுப்பாதை விபத்து- மீட்பு பணியில் கடற்படையினர்
கிண்ணியாவில் இன்று காலை (நவம்பர், 23) இடம்பெற்ற சோகமான படகு விபத்தினை தொடர்ந்து, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கடற்படை இறங்கியுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ் (Nikolai Patrushev) அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் சந்தித்தார்
சோவியத் சோசலிச குடியரசின் அரச புலனாய்வுச் சேவை (KGB) மற்றும் ரஷ்ய ஃபெடரல் பாதுகாப்புச் சேவை ஆகியவற்றில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டுள்ள நிக்கொலாய் பட்ருஷெவ் அவர்கள், 2008ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளராகப் பணியாற்றி வருகின்றார், இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகள், 2022 பெப்ரவரி 19அம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியை அடைகின்றன நிக்கொலாய் அவர்களின் இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
ரஷ்ய பாதுகாப்பு சபை செயலாளர் இலங்கைக்கு வருகை
ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிக்கோலாய் பட்ருஷேவ் நேற்றைய தினம் (நவம்பர், 22) இலங்கைக்கு வருகை தந்தார்.
50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர், 21) இடம்பெற்ற 50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( நவம்பர்,14) நடைபெற்ற போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.