பாதுகாப்பு செய்திகள்
பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் - பாதுகாப்பு செயலாளர்
சிறைச்சாலைகளில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் தண்டனை பெற்ற பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன எச்சரிக்கை விடுத்ததோடு சிறைச்சாலைகளில் உள்ள பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கெதிராக சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
'இட்டுகம' நிதியத்தின் இருப்பு ரூ.1,386 மில்லியனை எட்டியது
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்கும் 'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1,386 மில்லியனை எட்டியுள்ளது. இந்த நிதியத்திற்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களினால் அளிக்கப்படும் நிதி நன்கொடைகள் மூலம் குறித்த மைல் கல் எட்டப்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து 289 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை
டுபாய் நாட்டிலிருந்து 289 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 226 விமானத்தின் டுபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தனுஜ சமரதுங்க தெரிவித்தார்.
சேவையில் இருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளை மீண்டும் சேவைக்கமர்த்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப் படை வீரர்கள் உள்ளடங்கலான பொலிஸ் அதிகாரிகளை நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய பாதுகாப்பு செயலாளர் யாழ் விஜயம்
வடக்கில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு படையிரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தெடர்பில் ஆராய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழிற்கான விஜயம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டார்.
நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு கொவிட் மத்திய நிலைய தலைமையினால் விளக்கமளிப்பு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில், முப்படை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோரினால் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஜூன் 15) இடம்பெற்றுள்ளது.
ஒமந்தாயில் ஆறு கிலோ கேரளகஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம் பகுதியில் ஓமந்தை பொலிஸாருடன் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 6 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது
கட்டுநாயக்க குரன பகுதியில் ஆறு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை போலீஸ் போதை ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.
கொரோனா வரைஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் புகழிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் வகையில் கடற்படை விழிப்புடன்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை பல்வேறு கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கொரோனா வரைஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து புகழிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர், இசுரு சூரிய பண்டார இன்று (16) தெரிவித்தார்.
34 இலங்கை மாணவர்கள் நேபாளத்திலிருந்து நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேபாளத்திலில் சிக்கித்தவித்த இலங்கை மாணவர்கள் 34 பேர் இன்று அதிகாலை (ஜூன் 16) ஹிமாலய எயாலைன்ஸ் விஷேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மன்னார் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் 180 இராணுவ வீரர்கள் இரத்ததானம்
மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தினர் அண்மையில் (ஜூன், 14) இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 740 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்ட இலங்கை கடற்படை வீரர்கள் க சுமார் 740 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 14,097 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த சுமார் 13,875 பேர் இன்றுவரை தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட் -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.