பாதுகாப்பு செய்திகள்
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை எம் ரீ நியூ டயமன் கப்பலின் நிலைமை குறித்து ஆராய்வு
இலங்கை கடற்படையினருடன் இணைந்து அதன் மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு சுழியோடல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹண்டபுற இன்று (11) தெரிவித்தார்.
லான்ஸ் கோப்ரல் அபேகோன் தெற்காசிய போட்டியில் சாதனை
ஜேர்மன் நாட்டின் டிசாசு நகரில் இம்மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் இலங்கை இராணுவ வீரரான லான்ஸ் கோப்ரல் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியினை 10.16 செக்கன் வேகத்தில் ஓடி முடித்து தேசிய ரீதியில் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் -கடற்படை தெரிவிப்பு
நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் கல்முனை துறையில் இருந்து 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இழுத்துச்செள்ளப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா இன்று (10) தெரிவித்துள்ளார்.
இலங்கை இஸ்ரேல் அமைப்பான ‘ஹெல சரண’ வினால் 50 கலன்கள் கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கான திரவம் அன்பளிப்பு
கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கான ஐம்பது திரவ கலன்களை பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் நேற்று(9) அன்பளிப்பு செய்துள்ளனர்.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கான புதிய ஆய்வுகூடம் திறந்து வைப்பு
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் புதிய ஆய்வக்கூடம் ஒன்று நேற்று (8) திறந்துவைக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ சீ ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை மேலும் 300ஆல் அதிகரிக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் தீப்பிழம்புகளோ அல்லது புகையோ ஏற்படவில்லை - கடற்படை தெரிவிப்பு
நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பலிலிருந்து இன்று (09) எதுவித தீப்பிழம்புகளோ அல்லது புகையோ அவதானிக்கப்படவில்லை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைக்க விமான மற்றும் கடற்படையினர் தீவிர போராட்டம்
தற்போதுள்ள காற்றுடன் கூடிய வானிலை மற்றும் தொடர் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் உலர் இரசாயன கலவைகளை வீசுவதன் மூலம் எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ, ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
10 கிலோ தங்கத்தை கடத்தும் முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிப்பு
புத்தளத்தில் 10 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை கடத்த மேற்கொண்ட முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கார் ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்படவிருந்த குறித்த தங்கத்தை அதிரடி படையினர் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடல் காற்று கப்பலில் தீப்பிழம்புகளைத் தூண்டுகிறது - கடற்படை
எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீ கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக அதிகரித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'பாதாளயோ' மற்றும் ' கோட்டாபய' புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ஜனாதிபதியிடம் கையளிப்பு
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 59வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரினால் எழுதப்பட்ட 'கோட்டாபய' என்னும் சிங்கள புத்தகத்தின் ஆங்கில பதிப்பும், பாதாள உலக செயற்பாடுகளின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிங்கள நாவல் வடிவிலான 'பாத்தாளயோ' எனும் நாவலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
815 கிலோ உலர்ந்த மஞ்சள் கடத்தல் முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு
கற்பிட்டி, எத்தளை பிரதேசத்தில் இன்று (06) 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை சட்டவிரோதமாக கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது.
எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கு அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடுகிறது
எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கும் குறித்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு இடம்பெறுமானால் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டுள்ள எண்ணெய் கப்பலின் கெப்டன் மற்றும் காயமடைந்தவர்களும் இலங்கை கடற்படையினரால் மீட்பு
சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக காயமடைந்த மூன்றவது பொறியியலாளரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
தீப்பற்றிய எண்ணெய் தாங்கியை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர்
சற்றுமுன்னர் சங்கமன்கந்த துறைமுகத்திலிருந்து 38 கடல் மைல்களுக்கு அப்பால் தீப்பற்றி கொண்ட வெளிநாட்டு எண்ணெய் தாங்கி ஒன்றை மீட்பதற்காக கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் அதிவேக தாக்குதல் படகு என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.




