பாதுகாப்பு செய்திகள்
வருடாந்த NCC பயிற்சி அணிவகுப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்
2025 ஆம் ஆண்டிற்கான Hermann Loos மற்றும் De Soysa Challenge விருதுகளுக்கான வருடாந்த அணிவகுப்பு முகாம் இன்று (அக்டோபர் 21) ரன்டம்பேயில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் DSSC தூதுக்குழு
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது
கேர்ணல் Brandon Wood தலைமையிலான அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியின் (DSSC) தூதுக்குழு, இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தது.
அதிகாரமளிப்பு விழாவின் பாரம்பரிய பதவியேற்று விருந்தில்
பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்
திருகோணமலை சீனக்குடா விமானப்படை கலாசாலையில் நேற்று மாலை (அக்டோபர் 18) நடைபெற்ற விமானப்படையின் புதிதாக பதவியேற்று அதிகாரிகளுக்கான பாரம்பரிய பதவியேற்பு விருந்தில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார் .
இலங்கை விமானப்படை 3 ஆவது கடல்சார் படைப்பிரிவுக்கு
ஜனாதிபதியின் வர்ணம் வழங்கப்பட்டது
இலங்கை விமானப்படைக்கும் நாட்டிற்கும் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக இலங்கை விமானப்படையின் 3ஆம் இலக்க கடல்சார் படைப்பிரிவுக்கு ஜனாதிபதி வர்ணம் வழங்கப்பட்டது.
KDU பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விருந்தில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 36வது பட்டமளிப்பு விழா விருந்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். இவ் விழா நேற்று மாலை (அக்டோபர் 16) மொரட்டுவையில் உள்ள ரமாடியா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவினால் அரச நிறுவனங்களுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவினால் பொது பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த துறைகளின் அதிகாரிகளுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அக்டோபர் 15 (2025) அன்று பத்தரமுல்லையில் உள்ள “சுஹுருபாய”வில் நடத்தப்பட்டது.
மிஹின்து செத் மெதுரவிற்கான விஜயத்தின் போது மாற்றுத்திறனாளி யுத்த வீரர்களுக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (அக்டோபர் 15) மிஹின்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார். இவ்விஜயம் மாற்றுத்திறனாளி யுத்த வீரர்களின் நலன் மற்றும் நீண்டகால பராமரிப்புக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்தது.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் (KDU) 36வது பட்டமளிப்பு விழா BMICH இல் நடைபெற்றது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 36வது பொது பட்டமளிப்பு விழா நேற்று (அக்டோபர் 14) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
யுத்த வீரர்களின் நலனுக்கான பொது தின நிகழ்ச்சி
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடந்தது
யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான பாதுகாப்பு அமைச்சின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மற்றுமொரு பொது தின நிகழ்ச்சி, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (அக்டோபர் 14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இராணுவ ஆயுதக் களஞ்சியங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்
இலங்கை இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இரண்டு நாள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரை நிகழ்த்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு நேற்று (அக்டோபர் 10) உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டார்.
உலகளாவிய அமைதி காக்கும் நடவடிக்கைகளின் எதிர்காலம் குறித்த ஐ.நா. அமைதி காக்கும் வட்டமேசை மாநாட்டை இலங்கை நடத்துகிறது
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து, இலங்கை பாதுகாப்பு அமைச்சு, "அடுத்த தலைமுறை அமைதி காக்கும் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் சாத்தியமான பங்களிப்புகள்" என்ற தலைப்பில் அக்டோபர் 09 (2025) அன்று பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடலை நடத்தியது.
பாகிஸ்தான் NRTC தூதுக்குழு பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தது
பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் (NRTC) தூதுக்குழு ஒன்று இன்று (அக்டோபர் 10) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.
சந்தஹிரு சேய ஸ்தூபியை அட்டமஸ்தானத்திற்கு பொறுப்பளிப்பது குறித்த முதற்கட்ட கூட்டம் அனுராதபுரத்தில் நடைபெற்றது
சந்தஹிரு சேய ஸ்தூபியை அட்டமஸ்தானத்திற்கு பொறுப்பளிப்பது குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (அக்டோபர் 09), அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியவின் பிரதான சங்கநாயக்கர் சிராஸ்ரபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் மற்றும் ருவன்வெலிசேய விகாரையின் விகாராதிபதி, ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிராஸ்ரபதி பண்டித்த வணக்கத்திற்குரிய ஈத்தலவெட்டுனவெவே ஞானதிலக தேரர்களின் தலைமையில் அனுராதபுரத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தான் NRTC தூதுக்குழு பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது
பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் (NRTC) தூதுக்குழு இன்று (அக்டோபர் 08) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தது.
இலங்கை கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றினார்
இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 7) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேட்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அங்கு கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தினார்.
கொழும்பில் உள்ள ICRC தூதுக்குழு தலைவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க (ICRC) தூதுக்குழுவின் தலைவர் திருமதி Angelique Appeyroux, இன்று (அக்டோபர் 7) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ஏட்பாட்டில் தலசீமியா குழந்தைகளுக்கான விசேட சுற்றுலா
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) இன்று (அக்டோபர் 5) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவில் சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கான விசேட சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தது.
2025 ஆண்டின் 3வது காலாண்டிட்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
2025 ஆம் ஆண்டின் 3வது காலாண்டிற்கான கணைக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
பேரை ஏரியில் நீர் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்
கொழும்பு பேரை ஏரியில் நீர் விமான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (அக்டோபர் 3) நடைபெற்றது, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று காலை பேரை ஏரியில் நடந்த இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
கொழும்பில் நடைபெற்ற கொரிய தேசிய நிறுவன தின விழாவில்
பாதுகாப்பு செயலாளர் கலந்து கொண்டார்
கொழும்பில், சினமன் கிராண்ட் ஹோட்டலில் இன்று (அக்டோபர் 2) நடைபெற்ற கொரிய தேசிய நிறுவன தின (Korean National Foundation Day) விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்து கொண்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் சிரேஷ்ட இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு
உரை நிகழ்த்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (அக்டோபர் 01) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
கொழும்பில் ஜெர்மன் ஒற்றுமை தினம் 2025 கொண்டாடப்பட்டது
இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் ஏட்பாட்டில் 'ஜெர்மன் ஒற்றுமை தினம்' கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று மாலை (செப்டம்பர் 30) கொண்டாடப்பட்டது. ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் ஜெர்மன் மறு ஒன்றிணைப்பின் 34 வது ஆண்டு நிறைவைக் இந்த நிகழ்வு குறிக்கிறது.