பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

MOD சேவா வனிதா பிரிவினால் ஏட்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் அதிகளவு ஊழியர்கள் பங்கெடுப்பு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) இன்று (ஜூன் 18) ஏற்பாடு செய்த இரத்ததான முகாமில், அதிகளவான பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். சர்வதேச இரத்த தானம் தினத்தையொட்டி SVU இன் தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிக்கா பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இன்று காலை அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு
ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

MRIA சுற்றளவு வேலி சேதங்கள் குறித்து
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் கூட்டம்

மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) சுற்று வேலி தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூன் 17) கூட்டமொன்று நடைபெற்றது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் யானைகள் ஊடுருவுவதால் சுற்று வேலிக்கு ஏற்படும் தொடர்ச்சியான சேதங்கள் குறித்து இந்த கூட்டத்தின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) உடன் இன்று (ஜூன் 16) கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். இவ்விஜயம் இம் முக்கிய பொதுப் போக்குவரத்து மையத்தில் மேட்கொள்ளப்படவிருக்கும் புதுப்பித்தல் திட்டத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் அனர்த்த மீள்திறன் தொடர்பில் NDMP 2023–2030 திட்டம் தயார் செய்யப்படுகிறது

இன்று (ஜூன் 16) கொழும்பு Colombo City Centre, Courtyard by Marriott இல் நடைபெற்ற தேசிய அனர்த்த மீள்திறன் திட்டம் (NDMP) 2023–2030 தொடர்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஏற்பாடு செய்த இந்தப் கருத்தரங்கில் அரச, அரச சாரா நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த முக்கிய அங்கத்தவர்கள் இதில் கலந்துக்கொண்டனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2025 மூலோபாயத் திட்டம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு
மதிப்பாய்வு செய்கிறது

2025–2029 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக இன்று (ஜூன் 14) உஸ்வெட்டகையாவ மாலிமா மண்டபத்தில் ஒரு சிறப்புப் கருத்தரங்கு நடந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகள் மற்றும் செயல்பாடுகளுக்கான திட்டத்தை வகுப்பது தொடர்பில் இதில் கவனம் செலுத்தப்பட்டது. பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் திட்டமிடல் நிபுணர்கள் தங்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரு முன்னோக்கிய மற்றும் எதிர்கால மூலோபாய செயல்முறைக்கு அடித்தளம் அமைக்கவும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

NACWCயின் ஏட்பாட்டில் பாதுகாப்பு அமைச்சில் வீட்டுப் பாவனை இரசாயன பொருள்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது

இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் (NACWC), வியாழக்கிழமை (ஜூன் 12) பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர மண்டபத்தில் வீட்டுப்பாவனை இரசாயனங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக கையாள்வது குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

துருக்கிய கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' உத்தியோகபூர்வ
விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது

துருக்கியக் கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' இன்று காலை (2025 ஜூன் 13) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த நிலையில், இலங்கைக் கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

NCC தலைமையகத்திற்கு பதில் பாதுகாப்பு அமைச்சர் விஜயம்

பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (ஜூன் 13) கொழும்பு பாமன்கடையில் உள்ள தேசிய மாணவர் படையணி (NCC) தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கையின் பிரதான இளைஞர் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான NCC உடனான குறிப்பிடத்தக்க ஈடுபாட்டைக் எடுத்துக்காட்டுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் பதில் பாதுகாப்பு அமைச்சரை துருக்கிய தூதுவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

துருக்கி குடியரசின் தூதுவர், மேதகு செமிஹ் லுட்ஃபு துர்குட், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (ஜூன் 13) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சர் SERRIC நிலையத்திற்கு விஜயம்

பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (ஜூன் 12) இலங்கை இராணுவ செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு (SERRIC) விஜயம் செய்தார். வருகை தந்த பதில் பாதுகாப்பு அமைச்சரை நிலையத்தின் கட்டளை தளபதி மற்றும் பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'ஸ்ரீ ஜயவர்தனபுர பொசன் உதானய 2025' இரண்டாம் நாள் நிகழ்வில்
பதில் பாதுகாப்பு அமைச்சர் கலந்துக் கொண்டார்

ஸ்ரீ ஜயவர்தனபுர நகரின் சமய மற்றும் கலாச்சார மதிப்பை சேர்க்கும் வகையில், "ஸ்ரீ ஜயவர்தனபுர பொசன் உதானய 2025" தொடக்க விழா ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பொசன் வலயம் மாதிவெல ஸ்ரீ சம்புத்தாலோக விகாரை, ஜனாதிபதி செயலகம், புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் பல அரசு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பொசன் வலயம் பத்தரமுல்ல "கமத" வளாகத்தை மையமாகக் கொண்டு கிம்புலாவெல சந்தியிலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை சந்தி வரை அமைக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை இதுவரை 3,564 உயிர்காக்கும் இரத்தமாற்ற கருவிகளை வழங்கியுள்ளது

இலங்கை கடற்படை (SLN) இதுவரை 3,564 செலவு குறைந்த தலசீமியா உட்செலுத்துதல் கருவிகளை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது, குருதிவளிக்காவியின் உருவாக்கத்தில் குறைபாடு ஏற்படும் மரபணு சார்ந்த குருதி நோய் ஆகும். இதற்கு தொடர்ச்சியான இரத்தமாற்றம் அவசியமாகும். இதன்போது முக்கிய உறுப்புகளில் எற்படும் அதிகப்படியான இரும்புச்சத்து படிவை நீக்க சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். இச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் குருதி உட்செலுத்துதல் கருவி, நோயாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு உயிர்நாடியாகும்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டார்

ஜேர்மன் ஜனாதிபதி திரு. பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஜூன் 10) நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, நான்கு அமைச்சுகளுக்கான பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொசொன் வாழ்த்துச் செய்தி

பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாக தனித்துவமானதாக அமைகின்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2025 உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டது

2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜூன் 5 ஆம் தினதி பட்டப்படிப்பு கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில் "நமது உலகம், நமது பொறுப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இது சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

08 வது இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது

இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜூன் 05) நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்த இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இலங்கை பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்களை சந்தித்தார்

இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங், இன்று (ஜூன் 05) இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திருமதி மகேஷிகா கொலோன்னே, இன்று (ஜூன் 5) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை  (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.