பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை 12வது Galle Dialogue International Maritime Conference
மாநாட்டை நடத்துகிறது

இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் 12வது “Galle Dialogue International Maritime Conference” மாநாடு 2025 இம்மாதம் (செப்டம்பர்) 24 மற்றும் 25 திகதிகளில் வெலிசரை 'Wave n' Lake' கடற்படை மண்டபத்தில் நடைபெறும்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் 05வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கலந்து கொண்டார்

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் (CNDUAASL) 5வது ஆண்டு விழா செப்டம்பர் 14 பத்தரமுல்லையில் உள்ள Waters Edge ல் இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் அதிமேதகு Qi Zhenhong தலைமையில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நான்காம் துரித தாக்குதல் கைவினை படையின் வீரமிக்க கடற்படை வீரர்கள் தளபதியால் கௌரவிக்கப்பட்டனர்

கடற்படையின் 4வது துரித தாக்குதல் படகு படையில் இணைந்து, சேவையின் போது அங்கவீனமுற்ற வீர கடற்படை வீரர்களை கௌரவிக்கும் விழா, திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் உள்ள 4வது துரித தாக்குதல் படகு தலைமையகத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில், 2025 செப்டம்பர் 13, அன்று நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“Pacific Angel 2025” பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

திங்கட்கிழமை (செப்டம்பர் 08) தொடங்கிய “Pacific Angel 2025” பயிற்சி இன்று (12) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலங்கை விமானப்படை (SLAF) மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் கட்டுநாயக்கவில் எதிபாடுசெய்த நடைபெற்ற நிறைவு விழா Pacific Angel 2025வின் முடிவைக் குறித்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நிலச்சரிவு குறைப்பு தொடர்பான 6வது PSC கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடந்தது

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) செயல்படுத்தும் நிலச்சரிவு பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்ட(RLVMMP) வழிகாட்டுதல் குழுவின் (PSC ) , 6வது கூட்டம் இன்று (செப்டம்பர் 12) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் 19 ஆண்டு நிறைவு விழா

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் (CSD) நேற்று (செப்டம்பர் 10)  மிஹிந்தலையில் உள்ள சிவில் பாதுகாப்புப் படை நினைவிடத்தில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் அதன் 19வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. விழாவிற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை CSD யின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ (ஓய்வு) வரவேற்றார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாரஹென்பிட்டி இராணுவ மருத்துவமனைக்கு விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சமீபத்தில் (செப்டம்பர் 3) நாரஹென்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு வருகை தந்த பிரதி மைச்சரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அன்புடன் வரவேற்றார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கலாவெவ குளத்தில் படர்ந்துள்ள தாவரங்களை அகற்ற
இலங்கை இராணுவம் உதவி

"தூய இலங்கை" திட்டத்திற்கு இணையாக, வைல்ட் டஸ்கர்ஸ் அமைப்புடன் இணைந்து, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் பிரதேசத்திலுள்ள கலாவெவ குளத்தில் யானைகளின் வாழ்க்கை முறைக்கு தடையாக இருக்கும் படர்ந்துள்ள தாவர இனங்களை அகற்றுவதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் Digital Blueprint குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது

தேசிய கொள்கையில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னிலைப்படுத்தல், முதலீட்து வருமானம் (ROI) மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நிதி வரம்புகளை சமாளிக்க பொது தனியார் கூட்டுமுயற்சிகளை (PPPs) மேம்படுத்துதல் உள்ளிட்ட பல மூலோபாய முன்னுரிமைகள் கலாநிதி விஜயசூரிய வலியுறுத்தினார். குடிமக்கள் மற்றும் வணிக அனுபவம் அனைத்து டிஜிட்டல் முயற்சிகளின் மையத்திலும் இருக்க வேண்டும், அணுகல் எளிமை மற்றும் செயல்திறனை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையில் நீலகிரி விகாரை
புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள லாகுகல தேசிய பூங்காவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க விகாரை அமைந்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தங்கல்லை நகரசபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நே ற்று இரவு (செப்டம்பர் 04) எல்ல-வெல்லவாய வீதியின் 23 -24 km மைல்கல்
அருகே பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மீட்கப்பட்ட மற்றவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கிடையிலான வலுப்படுத்துதல்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளரும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) முகாமைத்துவ சபையின் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) ஆகியோர் நேற்று (செப்டம்பர் 2) வேரஹெரயிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (UH-KDU) பல்கலைக்கழக மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தனர்

மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு, நேற்று (செப்டம்பர் 1) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகராவை (ஓய்வு) மரியாதை நிமித்தம்  சந்தித்தனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு
பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தது

மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு இன்று (செப்டம்பர் 01) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

படை வீரர்களின் நலன் தொடர்பில் உறுதிப்பாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்

குருநாகல், பாங்கொல்லவில் உள்ள அபிமன்சல-3 மற்றும் அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல-1 ஆகிய ஊனமுற்ற யுத்தவீரர்களுக்கான பிரத்தியேக நிலையங்களுக்கு   பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த தினங்களில் செய்தார். இந்த விஜயம் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி மற்றும், ஊனமுற்ற போர்வீரர்களின் நல்வாழ்வுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரசாயன அச்சுறுத்தல்களைத் தணிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை NACWC நடத்தியது

“சுத்தமான இலங்கை” நிகழ்ச்சிக்கிணங்க இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் (NACWC), பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் திணைக்களங்களைச் சேர்ந்த 90 சிரேஷ்ட மற்றும் நடுத்தர மட்ட அரசு அதிகாரிகளின் பங்கேற்புடன், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர கேட்போர் கூடத்தில் இரசாயன அச்சுறுத்தல்களைத் தணிப்பது குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

80வது இந்தோனேசிய சுதந்திர தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டனர்

நேற்று (ஆகஸ்ட் 27) கொழும்பில் நடைபெற்ற 80வது இந்தோனேசிய சுதந்திர தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்துக் கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின்
2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஆகஸ்ட் 25) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.