பாதுகாப்பு செய்திகள்
இலங்கை கடற்படை மரீன்ஸ் படையணியின் ‘ப்ளூ வேல் 2024’
களமுனை பயிற்சி துவங்கியது
இலங்கை கடற்படையின் (SLN) மரீன்ஸ் படையணியினரால் மூன்றாவது (3வது) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘ப்ளூ வேல் 2024’ (Blue Whale 2024), களமுனை பயிற்சி திருகோணமலை, சம்பூரில் உள்ள விதுர முகாமில் அக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமானது.
விமானப்படை தலைமையகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு இன்று (ஒக்டோபர் 07) விஜயம் செய்தார்.
பாதுகாப்பு படை பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு
புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
அலரி மாளிகை வழியாக ரொட்டுண்டா சுற்றுவட்டத்திற்கு செல்லும் பாதை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது
கொள்ளுப்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, மைக்கல் சுற்றுவட்டத்திலிருந்து பிரதமர் இல்லம் (அலரி மாளிகை) வழியாக ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக 2005ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டது.
ஊடக அறிக்கை
தற்பாதுகாப்பிற்காக பொது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் படையணி மேற்கத்திய வாத்திய குழு போட்டி 2024 நடைபெற்றது
தேசிய மாணவர் படையணியின் (NCC) அகில இலங்கை மேற்கத்திய வாத்திய குழு போட்டி 2024 சமீபத்தில் (அக்டோபர் 2) ரன்டம்பேயில் உள்ள தேசிய மாணவர் படையணியின் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ தொடர்பு அதிகாரி பதவி ஏற்றார்
பாதுகாப்பு அமைச்சின் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ தொடர்பு அதிகாரி (MLO), இலங்கை விமானப் படையின் எயார் வைஸ் மார்ஷல் பி என் De கொஸ்தா USP ndc MBA in HRM MHRM, இன்று (அக். 4) கடமைகளை பொறுப்பேற்றார்.
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம். மொனிருஸ்ஸமான் இன்று (அக் 03) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) உபவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (அக்டோபர் 03) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்
பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை மரியாதையை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அந்தனி நெல்சன் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (அக்டோபர் 02) சந்தித்தார்.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் ஃபஹீம்-உல்-அஸீஸ் (ஓய்வு), பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகோந்தா (ஓய்வு) இன்று (அக் 01) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.
ஊடக அறிக்கை
முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பாக தொளிவுபடுத்தல்
விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்பட்டுவரும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
17வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இன்று ஆரம்பமாகியது
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 17வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு (IRC) இன்று (செப் 26) பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் தொடங்கியது.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு
செயலாளர் கலந்து கொண்டார்
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொன்தா (ஓய்வு) நேற்று மாலை (செப். 25) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த இந்திய மீன்பிடி இழுவை படகுக்கு இலங்கை கடற்படை உதவி
இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி இழுவை படகு நாடு திரும்புவதற்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியது.
தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் – 2024 போட்டியில் இலங்கை விமானப்படை வீரர்கள் பதக்கம் வென்றனர்
தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு இலங்கை விமானப்படை (SLAF) ஜூடோ வீரர்கள் தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். விமானப்படை சார்ஜன்ட் தர்மவர்தன 73 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், கோப்ரல் அபேசிங்க 100 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என விமானப்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார்
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்
தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) கடமை பொறுப்பேற்பு
எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) WWV, RWP மற்றும் இரண்டு பார்கள், RSP மற்றும் பார், USP, MMSc (Strat Stu- China), MSc (Def Stu) Mgt இல், MSc (Def & Strat Stu), fndu (சீனா), psc இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.