பாதுகாப்பு செய்திகள்
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு
செயலாளர் கலந்து கொண்டார்
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொன்தா (ஓய்வு) நேற்று மாலை (செப். 25) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த இந்திய மீன்பிடி இழுவை படகுக்கு இலங்கை கடற்படை உதவி
இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி இழுவை படகு நாடு திரும்புவதற்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியது.
தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் – 2024 போட்டியில் இலங்கை விமானப்படை வீரர்கள் பதக்கம் வென்றனர்
தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு இலங்கை விமானப்படை (SLAF) ஜூடோ வீரர்கள் தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். விமானப்படை சார்ஜன்ட் தர்மவர்தன 73 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், கோப்ரல் அபேசிங்க 100 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என விமானப்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார்
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்
தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) கடமை பொறுப்பேற்பு
எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) WWV, RWP மற்றும் இரண்டு பார்கள், RSP மற்றும் பார், USP, MMSc (Strat Stu- China), MSc (Def Stu) Mgt இல், MSc (Def & Strat Stu), fndu (சீனா), psc இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் 'சிறிமா மியூரசி - 2024' கலை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டனர்
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நடைபெற்ற "சிறிமா மியூரசி - 2024" இசை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இன் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வியாழக்கிழமை (செப். 19) நடைபெற்றது.
சைபர் மோசடி மையங்கள் மற்றும் மனித கடத்தல் குறித்து
NAHTTF அவசர எச்சரிக்கை விடுக்கிறது
மியான்மரில் உள்ள சைபர் மோசடி மையங்களுடன் தொடர்புடைய குற்றச்செயல்களிள் அதிகரிப்பு குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித கடத்தல்காரர்கள் இளம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை குறிவைத்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் தருவதாக கோரி ஆட்களை கவர்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கை இராணுவத்தின் (SLA) புதிய பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (செப். 18) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.
கேர்ணல் நளின் ஹேரத் இந்தியாவின் புத்தகயா-நாளந்தா பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் எதிர்காலம் முனைப்பு மாநாட்டில் உரையாற்றினார்
சினெர்ஜியா அறக்கட்டளை, நாளந்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதி (2024) வரை பகிரப்பட்ட மதிப்புகள், பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் எதிர்காலம் குறித்த அறிமுக போத்கயா-நாளந்தா முனைப்பு மாநாட்டை நடத்தியது. இந் நிகழ்வு இந்தியாவிள் புத்த பெருமான் ஞானம் பெற்ற இடமான புத்தகயா மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அதன் 18 வைத்து ஆண்டு
நிறைவை கொண்டாடியது
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் 9CSD) அதன் 18 வைத்து ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 13) கொழும்பில் உள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது.
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி நியமனம்
இலங்கை இராணுவத்தின் (SLA) புதிய பிரதம அதிகாரியாக இலங்கை இராணுவ சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மியான்மரில் பலவந்தமாக சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடுத்த மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 20 பேர் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) ஆல் மீட்கப்பட்டனர்
தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) ஒரு வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு சைபர் குற்றங்களில் ஈடுபடும் ஒரு குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் மியான்மரில் சட்டவிரோதமாக ஈடுபட்டிருந்த 20 இலங்கையர்களை மீட்டுள்ளது.
‘ராஜாலி சந்தேசய’; ஜெனரல் கமல் குணரத்னவின் 10வது இலக்கிய படைப்பு வெளியிடப்பட்டது
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட 2579 கவிதைகளைக் கொண்ட இலங்கையின் இலக்கிய வரலாற்றில் மிக நீளமான கவிதை தொகுப்பான ‘ராஜாலி சந்தேஷய’ நேற்று மாலை (செப்டம்பர் 06) நெலும் பொகுண திரையரங்கில் வெளியிடப்பட்டது. அவரது பிறந்த தினமான நேற்று இவ்வெளியீட்டு விழா நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கூட்டத்தில்
பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்
கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் திங்கட்கிழமை மாலை (செப் 02) நடைபெற்ற இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) பழைய மாணவர் சங்க ஒன்றுகூடலில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்
வெள்ளிப் பதக்கம் வென்றார்
பாரிஸ் பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை இராணுவத்தின் வாரண்ட் அதிகாரி II சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். திங்கட்கிழமை (செப். 02, 2024) நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தடகள வீரர் தனது பிரிவில் 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக இலங்கை இராணுவ ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அபேக்ஷா மருத்துவமனையில் இலங்கை விமானப்படை நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிறுவர் வார்ட் திறந்து வைக்கப்பட்டது
இலங்கை விமானப்படையின் (SLAF) தொழில்நுட்ப மற்றும் மனிதவள நிபுணத்துவத்துடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி சிறுவர் வார்ட் செவ்வாய்கிழமை (செப் 03) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய, ரூ. 150 மில்லியன் செலவில் ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் நிதியுதவியுடன் ‘ஹுஸ்ம’ திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையால் இக்கட்டிடத் தொகுதி ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டது.
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழு
இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு
இந்திய அரச இணைச் செயலாளர் ஸ்ரீ விஜய் நெஹ்ரா (IAS) தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) குழுவொன்று, இன்று (செப். 2) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுர பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தது.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ‘சிமிக் பார்க்’ மற்றும் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
இலங்கை இராணுவத்தால் நிறுவப்பட்ட ‘சிமிக் பார்க்’ கிளிநொச்சி" கடந்த 25 (ஆகஸ்ட்) திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சி மக்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காகவும் இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
வடக்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகில் இருந்த 02 மீனவர்களை கடற்படையினரால் மீட்கப்பட்டது
இலங்கைக்கு வடக்கு பகுதியில் கச்சத்தீவில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 14 கி.மீ) தொலைவில் இந்திய கடற்பரப்பில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்றில் இருந்து 02 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (27 ஆகஸ்ட் 2024) மீட்டுள்ளனர்.