செய்திகள்
காயமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்
பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்த மீனவர் ஒருவர் காயமுற்றதன் காரணமாக கடற்படையினரால் நேற்றையதினம் (ஜூலை, 18) கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை குறிபார்த்து சுடும் வீராங்கனைக்கு தர உயர்வு
டோக்யோ ஒலிம்பிக் போட்டி 2020 க்கு குறிபார்த்து சுடும் போட்டியில் தகுதிபெற்ற கடற்படை வீராங்கனை தெஹானி எகோதவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால்
பெட்டி ஒப்பிசர் தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது
31 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 37 மில்லியன் ரூபா பெறுமதியான 103.75 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இலங்கையில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைக்கு பாராட்டு
இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் நேற்று (ஜூலை 15) விஹார மஹா தேவி பூங்காவில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கு வருகை தந்தார்.
தீகவாபி தூபியின் முன்னைய மகிமையை மீண்டும் கொண்டுவரப்படும்
மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலய செரூபங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதே போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இராணுவத்தினரால் கிளிநொச்சியில் மேலும் இரு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள படைவீரர்களினால் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரண்டு தேவையுடைய குடும்பங்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேல் மாகாண ஆசிரியர்களுக்கு இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுப்பு
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேல் மாகாண ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டம் இன்று (ஜூலை, 12) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
103 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ் அனலைதீவு கடற்கரைப் பகுதியில் 344.55 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் இன்று (ஜூலை, 12) கைப்பற்றப்பட்டுள்ளது.
கின் கங்கையில் உள்ள குப்பை கூளங்கள் அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படையினர்
கின் கங்கை அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களின் கீழ் நீர் வழிப்பாதையை தடை செய்யும் வகையில் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் கடற்படை வீரர்களினால் அகற்றப்பட்டது.
2360 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
மன்னார் வங்காலை கடற்கரையில் நேற்றைய தினம் சுமார் 2 ஆயிரத்து 360 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கஞ்சா செய்கை இராணுவத்தினரால் அழித்தொழிப்பு
மொனராகலை, கெபிலித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை, மத்திய பாதுகாப்புபடை தலைமையகத்தின் கீழ் உள்ள 18வது கெமுனு வோச் படைவீரர்களினால் சுற்றிவளைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது.
கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானத்துடனும் செயற்படவும் - வளிமண்டலவியல் திணைக்களம்
மன்னாரிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோரும் கடற்படையினரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் இராணுவத்தினரால் 700க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் நடுகை
யாழில் மத ஸ்தலங்கள், அரச காணிகள், இராணுவ முகாம்கள், தரிசு நிலங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலம் என்பவற்றில் சுமார் 700க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை யாழ் பாதுகாப்பு படைக் கட்டளையகம் நேற்று (ஜூலை, 10) நடுகை செய்தது.
வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக கடற்படை தயார் நிலையில்
நாட்டின் பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மழை நிலைமைகளை கருத்தில் கொண்டு, வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கடற்படை நேற்று எட்டு நிவாரண குழுக்களை தயார்நிலையில் நிறுத்தியுள்ளது.
சந்தஹிருசேய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
சந்தஹிருசேய தூபியை அண்மித்தாக நிர்மாணிக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லினை இன்றைய தினம் (ஜூலை, 10) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நாட்டிவைத்தார்.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணபுரத்தில்தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு
கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. சசிதரன் சுதர்ஷினியின் குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழில் டெங்கு பரவலை தடுக்க இராணுவத்தினரினால் மதஸ்தானங்கள் சுத்தம் செய்யப்பட்டன
யாழ் தீபகற்பத்தில் டெங்கு நுளம்பு பரவும் என இனங்காணப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய யாழில் மத ஸ்தானங்களை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு படையினர் மேற்கொண்டனர்'
Tamil
பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டும் கடல் சார் கடற்படையின் பயிற்சிநெறி
பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டுதல் எனும் கடற்படையின் பயிற்சிநெறி, சிறப்பு படகுப் பிரிவு தலைமையத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன முன்னிலையில் அங்குராப்பனம் செய்துவைக்கப்பட்டது.
சேதனப் பசளை உற்பத்தியை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம்
சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தின் போது மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), அதிமேதகு ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக சேதனப் பசளை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
Tamil
Tamil























