செய்திகள்
தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து
பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் (CRD) மற்றும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, தேசிய பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (டிசம்பர் 31) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்
இலங்கை இராணுவத்தின் (SLA) 25 வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ RSP, psc, IG, MA in SSS (USA), MSc in SSS (KDU) அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்
வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, RSP, USP, ndc, psc, MMaritimePol, MBA in HRM, PG Dip in HRM, BMS, Dip in Mgt, AFIN இலங்கை கடற்படையின் (SLN) 26வது தளபதியாக அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க அதிகபட்ச முயற்சிகளை
எடுத்து வருகிறோம் - பாதுகாப்புச் செயலாளர்
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் நமது பாதுகாப்புப் படைகளை நவீனமயப்படுத்த அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.
2004 சுனாமியின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) இன்று (டிசம்பர் 26) நடைபெற்ற ‘தேசிய பாதுகாப்பு தினம்’ நினைவு விழாவின் போது, 35,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட 2004 சுனாமி பேரழிவின் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வும் நடைபெற்றது.
போர் வீரர்களின் நலன் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் போரில் காயமடைந்து அங்கவீனமுற்ற போர்வீரர்கள் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சபையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 26) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
Tamil
வாழ்த்துச் செய்தி
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் வலுவான அர்ப்பணிப்பு நாட்டிற்குத் தேவை - இராணுவ கெடெட் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்
"ஒரு நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் குடிமக்கள், அவர்களைப் பாதுகாப்பதே உங்களின் முதல் மற்றும் முக்கியக் கடமை. இந்தப் பொறுப்பு உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அவர்களின் உயிரைப் பாதுகாப்பது உங்கள் தலையாய கடமையாகும்," என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் கொலன்னாவை வெள்ளத் தடுப்பு
பணிகளில் கவனம் செலுத்தினார்
கொலன்னாவ பிரதேசத்தில் நிலவி வரும் தாழ்நில வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
2024 ஆம் ஆண்டின் மூளை ஆரோக்கிய வாரத்தின்
‘ஆதரவு தினம்’ KDU இல் நடைபெற்றது
மூளை சுகாதார வாரம் 2024 இன் ‘ஆதரவு தினம்’ இன்று (டிசம்பர் 19) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) நடைபெற்றது.
KDU உபவேந்தர் பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) உபவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (டிசம்பர் 19) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு)கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதுவர் பதில்
பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் ஈ சொனெக், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (டிசம்பர் 17) அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
பொதுமக்கள் தினத்தில் ஓய்வு பெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் உயிரிழந்த போர்வீரர் குடும்பங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்துகிறது
தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றின் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க கவனம் செலுத்தப்படுகின்றது.
இலங்கை இராணுவம் CPSTL உடன் இணைந்து கெரவலப்பிட்டி எண்ணெய்
சேமிப்பு முனையத்தில் தீயணைப்பு பயிற்சியை மேற்கொண்டது
கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கெரவலப்பிட்டி பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இலங்கை இராணுவம் (SLA) மற்றும் இலங்கை பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் நிறுவனத்துடன் (CPSTL) இணைந்து தீயணைப்பு ஒத்திகை பயிற்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
MINUSCA பணியிலுள்ள இலங்கை விமானப்படை
குழுவின் கட்டளை மாற்றம்
மத்திய ஆபிரிக்க குடியரசில் (MINUSCA) ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் படை பணியிலுள்ள இலங்கை விமானப்படையின் 10வது விமானப்படை குழு டிசம்பர் மாதம் (06) கடமைக்காக அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 14 ஆம் திகதி மத்திய ஆபிரிக்க குடியரசின் பிரியாவில் உள்ள இலங்கை விமானப் பிரிவில் கட்டளை அதிகாரிகளின் மாற்றம் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை ஊடகங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்களை பாதுகாப்பதே எங்களின் தலையாய
பொறுப்பு - பதில் பாதுகாப்பு அமைச்சர்
ஒரு நாட்டின் பொக்கிஷம் அதன் குடிமக்கள். இராணுவத்தின் பொக்கிஷம் அதன் வீரர்கள். நாட்டின் இராணுவம் என்ற வகையில், நாட்டு மக்களை பாதுகாப்பதே நமது தலையாய பொறுப்பு என பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.