செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

துருக்கிய கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' உத்தியோகபூர்வ
விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது

துருக்கியக் கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' இன்று காலை (2025 ஜூன் 13) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த நிலையில், இலங்கைக் கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

NCC தலைமையகத்திற்கு பதில் பாதுகாப்பு அமைச்சர் விஜயம்

பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (ஜூன் 13) கொழும்பு பாமன்கடையில் உள்ள தேசிய மாணவர் படையணி (NCC) தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கையின் பிரதான இளைஞர் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான NCC உடனான குறிப்பிடத்தக்க ஈடுபாட்டைக் எடுத்துக்காட்டுகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் பதில் பாதுகாப்பு அமைச்சரை துருக்கிய தூதுவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

துருக்கி குடியரசின் தூதுவர், மேதகு செமிஹ் லுட்ஃபு துர்குட், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (ஜூன் 13) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சர் SERRIC நிலையத்திற்கு விஜயம்

பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (ஜூன் 12) இலங்கை இராணுவ செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு (SERRIC) விஜயம் செய்தார். வருகை தந்த பதில் பாதுகாப்பு அமைச்சரை நிலையத்தின் கட்டளை தளபதி மற்றும் பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

'ஸ்ரீ ஜயவர்தனபுர பொசன் உதானய 2025' இரண்டாம் நாள் நிகழ்வில்
பதில் பாதுகாப்பு அமைச்சர் கலந்துக் கொண்டார்

ஸ்ரீ ஜயவர்தனபுர நகரின் சமய மற்றும் கலாச்சார மதிப்பை சேர்க்கும் வகையில், "ஸ்ரீ ஜயவர்தனபுர பொசன் உதானய 2025" தொடக்க விழா ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பொசன் வலயம் மாதிவெல ஸ்ரீ சம்புத்தாலோக விகாரை, ஜனாதிபதி செயலகம், புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் பல அரசு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பொசன் வலயம் பத்தரமுல்ல "கமத" வளாகத்தை மையமாகக் கொண்டு கிம்புலாவெல சந்தியிலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை சந்தி வரை அமைக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை இதுவரை 3,564 உயிர்காக்கும் இரத்தமாற்ற கருவிகளை வழங்கியுள்ளது

இலங்கை கடற்படை (SLN) இதுவரை 3,564 செலவு குறைந்த தலசீமியா உட்செலுத்துதல் கருவிகளை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது, குருதிவளிக்காவியின் உருவாக்கத்தில் குறைபாடு ஏற்படும் மரபணு சார்ந்த குருதி நோய் ஆகும். இதற்கு தொடர்ச்சியான இரத்தமாற்றம் அவசியமாகும். இதன்போது முக்கிய உறுப்புகளில் எற்படும் அதிகப்படியான இரும்புச்சத்து படிவை நீக்க சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். இச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் குருதி உட்செலுத்துதல் கருவி, நோயாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு உயிர்நாடியாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டார்

ஜேர்மன் ஜனாதிபதி திரு. பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஜூன் 10) நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, நான்கு அமைச்சுகளுக்கான பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொசொன் வாழ்த்துச் செய்தி

பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாக தனித்துவமானதாக அமைகின்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2025 உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டது

2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜூன் 5 ஆம் தினதி பட்டப்படிப்பு கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில் "நமது உலகம், நமது பொறுப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இது சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

08 வது இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது

இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜூன் 05) நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்த இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இலங்கை பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்களை சந்தித்தார்

இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங், இன்று (ஜூன் 05) இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திருமதி மகேஷிகா கொலோன்னே, இன்று (ஜூன் 5) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை  (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கப்பலுக்குள் நுழைதல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் குறித்த பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் கடல்சார் அதிகார வரம்பு விழிப்புணர்வு பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தால் (United Nations Office on Drugs and Crime - UNODC) திருகோணமலை சிறப்பு கப்பல் படை தலைமையகம் மற்றும் சோபர் தீவில் நடத்தப்பட்ட படகுகளில் நுழைதல், சோதனை செய்தல் மற்றும் கைப்பற்றுதல் முறைகள் (Regional Visit, Board, Search, and Seizure - VBSS) தொடர்புடைய பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்த்துடன், மேலும் சான்றிதழ் வழங்கும் விழா 2025 மே 30, சிறப்பு கப்பல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மட்டக்களப்பின் நிலைமைகளை பாதுகாப்பு
செயலாளர் நேரில் ஆராய்வு

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேரில் சென்று பார்வையிட்டதுடன்(ஜூன் 03) அது தொடர்பிலான மதிப்பிடுகளையும் மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை - அவுஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும்

அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ ரிச்சர்ட் மார்ல்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) உடன் இன்று (ஜூன் 03) கொழும்பில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீவன்சும் இதன்போது சமூகமளித்திருந்தார்.    


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மனித-யானை மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை

புத்தளம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவது குறித்து கலந்தாலோசிக்க, பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தலைமையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (ஜூன் 2) கொழும்பு 5, நாரஹேன்பிட்டை நில மெதுரவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) கூடியது

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) அதன் 9வது அமர்வுக்காக மே 30, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. இந்தக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கான விதவைகள் மற்றும் அனாதை ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு

ஓய்வுபெற்ற போர் வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு விதவைகள் மற்றும் அனாதை ஓய்வூதியம் (W&OP) வழங்குவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று (மே 30) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.