செய்திகள்
பாதுகாப்பு பிரதி அமைச்சரை இலங்கை செஞ்சிலுவை
சங்க தூதுக்குழுத் தலைவி சந்தித்தார்
இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தூதுக்குழுத் தலைவர் Séverine Chappaz, வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE இலங்கை விஜயம்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE நேற்று (மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக் கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றதாக இலங்கை கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் DSCSCன் 'Diner's Club' நிகழ்ச்சியில் விசேட விரிவுரையாற்றினார்
மாக்கொளை பாதுகாப்புப் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) 'Diner's Club' நிகழ்ச்சியில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று மாலை (மார் 12) விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.
‘சுத்தமான இலங்கை’ தேசிய திட்டத்தின் கீழ் முப்படையினரால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகள் மறுசீரமைப்பு பணிகள், பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையுடன் நாடளாவ ரீதியில் வெற்றிகரமாக நடைபெறுகிறது
அரசாங்கத்தின் 'சுத்தமான இலங்கை' தேசிய திட்டத்திற்கு இணங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், நாடளாவ ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் முப்படைகளின் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவானது
சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியை நடாத்தியது
மார்ச் 08 ஆம் திகதி வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி அவர்களின் அறிவுறுத்தலின் படி, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி டாக்டர் ருவினி ரசிகா பெரேரா அவர்களின் தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் பங்கேற்புடன், பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் மனைவியர்களுக்கான சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சி இன்று (2025 மார்ச் 8) வெலிசறை கடற்படை வளாகத்தில் உள்ள Wave N’ Lake விழா மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கையின் விரிவான கடல்சார் உத்திக்கான தேவையை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்
இந்து சமுத்திர பிராந்தியத்தில் (IOR) ஒரு தீவாக, இலங்கைக்கு பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட கடல்சார் உத்தி தேவைப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய இயக்கவியல் சகாப்தத்தில், வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நிவர்த்தி செய்ய ஏற்கனவே உள்ள கடல்சார் கொள்கைகளை மறுஆய்வு செய்வது அவசியமாகியுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வெள்ளிக்கிழமை (மார்ச் 7) கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு (NDC) விஜயம் செய்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரக்னா அராக்க்ஷக
லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு விஜயம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), வியாழக்கிழமை (மார்ச் 6) ரக்னா அராக்க்ஷக லங்கா லிமிடெட் (RALL) நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். அரசாங்கத்திற்குச் சொந்தமான பாதுகாப்பு சேவை நிறுவனமான RALL, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படுகிறது.
இலங்கை விமானப்படை மருத்துவமனை திட்டம் தொடர்பான கூட்டம் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
இலங்கை விமானப்படை மருத்துவமனை கட்டுமான திட்டம் குறித்த கூட்டம் இன்று (மார்ச் 7) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாக்கிஸ்தான் கடற்படை கப்பல் PNS அஸ்லட் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) அஸ்லட் புதன்கிழமை (மார்ச் 5) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு இணங்க, இலங்கை கடற்படை வருகை தந்த கப்பலுக்கு வரவேற்பு அளித்ததாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையில் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் நிகழ்வில் பங்குபற்றும்
பக்தர்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்
சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை ஹெடஓயா பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையில் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் புனித மகோற்சவத்திற்காக வருகைத்தரும் பத்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை 2025 மார்ச் 04 ஆம் திகதி, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தேவையான நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பாணம பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கடற்படையினர் தொடர்ந்தும் பங்களிக்கின்றனர்
கனமழை காரணமாக பாணம பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை 2025 மார்ச் 03 அன்று, ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன.
நீலகிரி தூபியின் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை
பிரதிஷ்டை செய்யும் விழா நடைபெற்றது
பௌத்த கலாச்சாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நீலகிரி தூபியின் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டை செய்யும் விழா சமீபத்தில் (மார்ச் 4) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை விமானப்படையின் புதிய பிரதம அதிகாரி நியமனம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்கள், இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் L H சுமனவீரவை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
கெமுனு ஹேவா படையணி படையினரால் மீட்பு நடவடிக்கை
ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை கெமுனு ஹேவா படையணியின் நன்பெரியல் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிவாரணப் படையினர் 2025 மார்ச் 1 அன்று வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
டாக்காவில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் காலநிலை பாதுகாப்பு
குறித்து கர்னல் நலின் ஹேரத் உரையாற்றினார்
தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் (INSS) பதில் பணிப்பாளர் நாயகம் மற்றும் இயக்குநர் (ஆராய்ச்சி), மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக இயக்குநரும் பேச்சளருமான கேர்னல் நலின் ஹேரத், அண்மையில் பங்களாதேஷ் டாக்கா நகரில் நடந்த பிராந்திய மாநாடொன்றில் "Droughts, Floods and Fault Lines: Climate Security in South Asia" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். டாக்காவில் உள்ள Renaissance ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், பிப்ரவரி 24-25 திகதிகளில் பங்களாதேஷ் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் (BIPSS) நிருவனத்தினால் ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.